குலசேகரம் அருகே பைக் விபத்தில் மீன் வியாபாரி பலி

குலசேகரம், டிச. 15: குலசேகரத்தை  அடுத்துள்ள களியல் மணத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(42). மீன்   வியாபாரி. நேற்று முன்தினம் மாலை ரமேஷ் திருவரம்பு-கொல்வேல் சாலையில் மீன்   வியாபாரத்துக்கு பைக்கில் சென்றார். கொல்வேல் பகுதியில்  செல்லும்போது, சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் வேகமாக சென்றுள்ளார்.  இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் சாலையோர காம்பவுண்ட் சுவரில் மோதி  விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து அவரது மனைவி சசிகலா கொடுத்த புகாரின்படி திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: