சென்னை அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சுடுநீர் வசதி

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் குறைகளை கண்டறிய அனைத்து வார்டுகளிலும், ஆலோசனை பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் பெறப்பட்ட கடிதத்தில் நோயாளிகளுக்கு அனைத்து வார்டுகளிலும், சுடுநீர் வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்த வேண்டுகோள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அரசின் வழிக்காட்டுதலின்படி, 115 சுடுநீர் கருவிகள் பொருத்த திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. தற்போது, அடுக்குமாடி ஏ பிளாக், பி பிளாக், சி பிளாக்குகளில் சுடுநீர் கருவிகள் பொருத்தும் பணி முடிவடைந்துள்ளது. கல்லீரல், முடக்குவாதம், சிறுநீரகம், நரம்பியல், இதயவியல் உள்ளிட்ட பிரிவுகளில், இதற்கான பணிகள் நடந்து வருகிறது. தற்போது பொருத்தப்பட்டுள்ள இடங்களில் காலை 5 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 6 முதல் 8 மணி வரையிலும் சுடுநீர் பிடித்து பயன்படுத்தலாம்.

Related Stories: