×

திருப்பூர் மாநகரில் டெங்கு அதிகரிப்பு கொசு மருந்து ெதளிப்பு பணி தீவிரம்

திருப்பூர், டிச. 14:  திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் சிலர் டெங்கு பரிசோதனை செய்யும்போது அவர்களுக்கு டெங்கு காய்ச்சலும் உறுதி செய்யப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை என பலரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.மாவட்டத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் திருப்பூர் மாநகர பகுதியில் மட்டும் 120க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

எனவே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் வீடு வீடாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் சுகாதாரப் பணியாளர்கள் பொது மக்களின் வீடுகளுக்கு சென்று தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து மருந்து தெளித்து வருகிறார்கள். இருப்பினும் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும். வீடுகளின் அருகில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Tirupur ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்