வரதராஜ பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருப்பூர், டிச.15:  மார்கழியில் முக்கியமான நாள் வைகுண்ட ஏகாதசி. பெருமாள் பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியமான நாள் ஆகும். அன்றைய நாளில் விரதம் இருந்து, கண்விழித்து பெருமாளை தரிசனம் செய்வார்கள். இதுபோல் சொர்க்க வாசல் திறப்பு மிகவும் முக்கியமான நிகழ்ச்சி ஆகும். இதற்கிடையே ஸ்ரீரங்கத்தில் தற்போது வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் தொடங்கி நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் நேற்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் நேற்று கோவில்வழியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டு சென்றனர். மற்ற கோவில்களில் அடுத்த மாதம் வைகுண்ட ஏகாதசி விழா நடக்க இருக்கிறது.

Related Stories: