திடீர் மழையின் காரணமாக பிச்சாட்டூர் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு

ஊத்துக்கோட்டை: திடீர் மழையின் காரணமாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரியில் இருந்து 1,600 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநிலமான நாகலாபுரம், நந்தனம், பிச்சாட்டூர் பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பியது. இந்த ஏரியின் கொள்ளளவு 281 மில்லியன் கனஅடி. மீண்டும் மழை பெய்து வரும் நிலையில்  தற்போது 280 மில்லியன் கனஅடி நீர் இருப்பு வந்தால் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 280 மில்லியன் கனஅடிக்கு மேல் நீர் இருப்பு அதிகமானதால் தண்ணீர் திறக்கப்பட்டது. பிச்சாட்டூர் ஏரிக்கு மழைநீர் வினாடிக்கு 1,500 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

இதனால், ஏரியின் பாதுகாப்பு கருதி ஒரு மதகு  வழியாக நேற்று முன்தினம் வினாடிக்கு காலை 1,600 கனஅடி வரை தண்ணீர்  திறக்கப்பட்டது. இதனால், ஊத்துக்கோட்டை சிட்ரபாக்கம் தடுப்பணை மீண்டும் நிரம்பி வழிகிறது. மேலும், பெரியபாளையம் அருகே புதுப்பாளையம் தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இந்த பாலத்தில் அப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் நடந்து செல்கின்றனர். இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: