காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் லட்ச தீபப் பெருவிழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கார்த்திகை மாதம் சோமவார நிறைவை முன்னிட்டு நேற்று முன்தினம் அகல் விளக்கேற்றி நெய் தீபம் போட்டு பக்தர்கள் வழிபட்டனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு தினமும் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்மனையும் தரிசித்து செல்கின்றனர். அவர்கள், இக்கோயிலில் உள்ள 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மாமரத்தை சுற்றி வழிபடுகின்றனர்.

இதுபோல் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் லட்ச தீப விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதை முன்னிட்டு மூலவர் ஏகாம்பரநாதருக்கும், ஏலவார் குழலி அம்மனுக்கும் 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. லட்ச தீபத்தையொட்டி. ஏராளமான பக்தர்கள், கோயில் உள்பிரகாரத்தில், அகல் விளக்கில் நெய் தீபம் போட்டு, குடும்பத்துடன் மனமுருகி சிவபெருமானையும், ஏலவார் குழலி அம்மனையும், வழிபட்டனர்.

Related Stories: