கோவில்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பங்கேற்பு

கோவில்பட்டி, டிச. 14: கோவில்பட்டி  ராஜிவ்நகரில் நடந்த கற்பக விநாயகர் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில்  கடம்பூர்  ராஜூ எம்எல்ஏ பங்கேற்றார். கோவில்பட்டி  ராஜிவ்நகர் கற்பகவிநாயகர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி 11 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு  பூஜைகள் நடந்தன. இதில் முன்னாள் அமைச்சரான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, பங்கேற்று சாமி தரிசனம்  செய்தார். இதே போல் தொழிலதிபர் மகாலட்சுமி சந்திரன், முன்னாள் ஒன்றிய  கவுன்சிலர் பாலமுருகன் மற்றும் கோயில் நிர்வாகிகள் ராஜிவ் நகர் மற்றும்  சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: