×

வத்திராயிருப்பில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

வத்திராயிருப்பு, டிச.14: வத்திராயிருப்பில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஷேக் முகமது தலைமை வகித்தார். எஸ்.டி.பி.ஐ மாவட்டச் செயலாளர் ஒலியுல்லா, தொகுதிச் செயலாளர் இம்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு போதை விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை அரசு அனுமதியின்றி நடத்தியதால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்டச் செயலாளர் ஷேக் முகமது உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : Vatri ,
× RELATED வத்திராயிருப்பு அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்