×

விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

அருப்புக்கோட்டை, டிச.14: இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலின் உபகோயிலான அரசமரம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் கால யாகசாலை பூஜை, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தீபலட்சுமி பூஜை, நவக்கிரக ஹோமத்துடன் துவங்கியது. கோ பூஜை, விக்னேஷ்வர பூஜை, சுமங்கலி பூஜை, இரண்டாம் கால யாகசால பூஜை நடந்தது. நேற்று காலை 108 த்ரவ்யா ஹூதி மூல மந்திரம் ஹோமம் நடந்தது.

காலை 6.45 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் கடம் யாக வேள்வியில் இருந்து புறப்பட்டு விநாயகருக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், நகர திமுக செயலாளர் மணி, மாநில நெசவாளர் அணி செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் கணேசன், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், தக்கார் பாஸ்கரன், செயல் அலுவலர் தேவி உட்பட 1000க்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ganesha Temple ,
× RELATED அவிநாசியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருமணம்