×

குச்சனூர் வாக்காளர் பட்டியலில் குளறுபடி பேரூராட்சி செயல் அலுவலரிடம் திமுகவினர் புகார்

சின்னமனூர், டிச. 4: சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சியில் 2 வார்டுகள் உள்ளன. இங்கு 6,8 வாக்குகள் உள்ளன. வருகிற பிப்ரவரியில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் நடத்தப்போவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தேனி மாவட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வாக்காளர் பட்டியலை கலெக்டர் முரளிதரன் வெளியிட்டார். இந்நிலையில், குச்சனூர் பேரூராட்சி வாக்காளர் பட்டியலில் கடந்த அதிமுக ஆட்சியில், 2 வார்டுகளின் திமுக கிளைச் செயலாளர்களின் பெயர்களை வேண்டும் என்றே, வேறு வார்டுகளுக்கு மாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், திமுகவினர் தேர்தலில் நிற்காமல் இருக்க குளறுபடி செய்திருப்பதாக கூறுகின்றனர். திமுகவில் சேர்ந்த உறுப்பினர்களின் பெயர்களையும், வார்டு வரையறை என்ற பெயரில் அதிமுகவினர் அதிகாரிகளின் கையில் வைத்துக்கொண்டு குளறுபடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திமுக மாவட்ட பிரதிநிதி குச்சனூர் கிட்டு என்ற கிருஷ்ணசாமி பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலாவிடம் புகார் மனு அளித்தார்.

அதில், ‘வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை களைந்து அனைவரும் வாக்களிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். செயல் அலுவலர் சசிகலா கூறுகையில், ‘வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை கண்டறிந்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து தேர்தல் அலுவலரின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : Kuchanur ,
× RELATED தேவாரம் பகுதியில் குறைந்து வரும் நாட்டு கோழி வளர்ப்பு