×

தந்தை, மகன் தலைமறைவு: வருசநாடு அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டுமாடு

வருசநாடு, டிச. 4: வருசநாடு அருகே, மலைப்பகுதியில் காட்டுமாடு மர்மமாக இறந்து கிடந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வருசநாடு அருகே, நொச்சி ஓடை மலைப்பகுதியில் காட்டுமாடு ஒன்று மர்மமாக இறந்து கிடந்தது. தகவலறிந்த வருசநாடு வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த காட்டுமாட்டை பார்வையிட்டனர். இதையடுத்து கால்நடை மருத்துவர் வெயிலான் தலைமையில் உடற்கூராய்வு செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.

இதில், மேகமலை உதவி வனப்பாதுகாவலர் ரவிக்குமார், வருசநாடு (பொ) வனச்சரகர் ஆறுமுகம், வனவர் பிரதீப் மற்றும் வனத்துறை அலுவலர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள் உடனிருந்தனர். இது குறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், ‘இறந்து கிடந்த காட்டுமாடுக்கு 4 வயதிருக்கும். மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் நோயால் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா என ஆய்வு செய்ய தனிக்குழு அமைத்துள்ளோம். உடற்கூராய்வு அறிக்கை வந்த பின்னர்தான் முடிவு தெரியும்’ என்றார். வருசநாடு அருகே நொச்சி ஓடை மலைப்பகுதியில் இறந்து கிடந்த காட்டுமாடு.   

Tags : Varusanadu ,
× RELATED வெளிமாநில வரத்து அதிகரிப்பு வருசநாட்டில் தேங்கும் தேங்காய்கள்