×

பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை: தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தேவகோட்டை, டி.14: காரைக்குடி கணேசபுரம் கருணாநிதி நகரில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 60 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களுக்கு முறையாக பட்டா வழங்காததை கண்டித்து, தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். குடியிருப்போர் நலச்சங்க தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில், கடந்த 2008ம் ஆண்டு எங்களுக்கு பட்டா வழங்கினர். சரியாக பட்டா வழங்காமல் தவறுதலாக காரைக்குடி கருணாநிதி நகர் என்பதற்கு பதிலாக கழனிவாசல் என்று கொடுத்தனர்.

அதன் பிறகு மீண்டும் போராடி எங்கள் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்தனர். ஆனால் சிலர் எங்கள் மீது வீண் பழி சுமத்தி பட்டா வழங்கியது நிறுத்தி வைக்கப்பட்டது. எங்கள் பகுதி மக்களிடம் தீர விசாரித்து எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார். முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள், கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். மனு மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென தேவகோட்டை ராம்நகரில் திருச்சி-ராமேஸ்வரம் மாநில சாலையில் அமர்ந்து    

சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு தாசில்தார் அந்தோணிராஜ், டிஎஸ்பி ரமேஷ், மற்றும் வருவாய்த்துறை, போலீஸ்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்று(14ம்தேதி) சம்பந்தப்பட்ட பகுதிக்கு கோட்டாட்சியர் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்வார் என உறுதி அளித்த பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.
* பிலவ வருடம் கார்த்திகை மாதம் 28-ம் நாள். செவ்வாய்க்கிழமை. வளர்பிறை.    
* திதி : ஏகாதசி  இரவு 11.36மணி வரை; அதன் பிறகு துவாதசி.
* நட்சத்திரம் : அஸ்வினி  மறுநாள் விடியற்காலை 4.40 மணி வரை அதன் பிறகு பரணி.
* யோகம் : சித்தயோகம்.
* சூலம் : வடக்கு; பரிகாரம் : பால்.
* நல்ல நேரம் : காலை 7.45 - 8.45 ; மாலை 4.45 - 5.45.
* ராகு காலம் : மாலை 3.00 - 4.30 மணி வரை.
* எமகண்டம் : காலை 9.00 - 10.30
* சந்திராஷ்டமம் : உத்திரம்.

Tags : Governor ,Devakottai Governor ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...