×

ரெட்டமலை கோயில் வளாகத்தில் ஜல்லிக்கட்டு

திருச்சி, டிச.14: திருச்சி கலெக்டர் அலுவலத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சிவராசு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இதில் ரெட்டமலை ஒண்டிக்கருப்பு சாமி கோயில் கமிட்டி செயலாளர் நவல்பட்டு தெற்கு தெருவை சேர்ந்த அய்யாசாமி மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் பிராட்டியூர் கிராமம் எல்லைக்குள் ரெட்டமலை ஒண்டிக்கருப்புசாமி கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும். கடந்த 2008, 2009ம் ஆண்டுகளில் அரசு அதிகாரிகள் அளித்த பரிந்துரை அனுமதி கடிதங்கள் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : Jallikattu ,Rettamalai temple complex ,
× RELATED கொன்னையம்பட்டியில் ஜல்லிக்கட்டு; 800...