மன்னார்குடியில் பின்லே மேல்நிலைப்பள்ளி மைதான சுற்றுச்சுவரை கட்ட நடவடிக்கை

மன்னார்குடி, டிச. 14: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நூற்றாண்டுகளை கடந்த பழமை யான அரசு உதவி பெறும் பின்லே மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து முன்னாள் மாணவர் கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். இதன்முலம் தங்களுக்கு கல்வி போதித்த பள்ளிக்கு தேவையான பல்வேறு வசதிகள் செய்து தருவத ற்கு முன்னாள் மாணவர்கள் திட்ட மிட்டுள்ளனர். இந்த நிலையில், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் பள்ளியின் முன்னாள் உதவி தலைமையாசிரியர் செல்லையா தலைமையில் அரசு உதவிபெறும் பின்லே மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. பள்ளி தாளாளர் ஸ்டேன்லி, மனித உரிமை ஆணைய பிரிவு அரசு வழக்கறிஞர் கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் பாலு, முன்னாள் நகர மன்ற துணை தலைவர் பாஸ்கர், ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் இலரா மோகன் உள்ளிட்ட முன்னாள் மாணவர் கள் பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் பின்லே மேல்நிலை பள்ளி மைதானத்தின் சுற்றுச் சுவரை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராஜதுரை, அசோகன், மனோ கரன் உள்ளிட் டோர் செய்திருந்தனர். முன்னதாக முன்னாள் மாணவர் சத்திய மூர்த்தி வரவேற்றார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் துரை பாஸ்கர் நன்றி கூறினார்.

Related Stories: