மன்னார்குடி அரசுக்கல்லூரியில் பிபின் ராவத் மறைவுக்கு அஞ்சலி

மன்னார்குடி, டிச. 14: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தனது மனைவி மதுலிகா மற்றும் 11 ராணுவ அதிகாரி களோடு ஹெலிகாப்டரில் வெலிங்டன் சென்ற போது விபத்து ஏற்பட்டு வீர மரணம் அடைந்தனர். இந்த நிலையில் பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மன் னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் முனைவர் உஷா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் என்சிசி அலுவலர் லெப் ராஜன், என்எஸ்எஸ் அலுவலர் முனைவர் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பிபின்ராபத் திருவுருவ படத்தினை ராணுவ அணிவகுப்புடன் எடுத்து வந்து வீரவணக்கம் செலுத்தி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: