×

கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளையை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கந்தர்வகோட்டை, டிச.14: கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளையை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கோமாபுரம் கிராமத்தில் வசிக்கும் கலையரசன் என்பவர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். புதுக்கோட்டை தவிர பல்வேறு மாவட்டங்களுக்கு காளையை வாகனங்களில் ஏற்றிச் சென்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்து பல்வேறு பரிசுகளை பெறுவார். இவ்வாறு ஜல்லிக்கட்டு புகழ்பெற்ற காளை 30 அடி ஆழம் கொண்ட கோமாபுரம் கிராமத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதை பார்த்த இந்த பகுதி மக்கள் உடனே கந்தர்வகோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விபரம் பெற்ற நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் விழுந்த காளையில் மீது கயிறுகளை கட்டி பத்திரமாக காளையை வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags : Jallikattu ,Kandarwakottai ,
× RELATED பொன்னமராவதி முள்ளிப்பாடியில் ஜல்லிக்கட்டு 840 காளைகள் சீறிப்பாய்ந்தன