திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தங்கையை பிரசவத்துக்கு அனுமதித்த அண்ணன் திடீர் சாவு

திருவண்ணாமலை, டிச.14: திருவண்ணாமலையில் தங்கையை மருத்துவமனையில் அனுமதிக்க சென்ற அண்ணன் உடல் நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ்(23), இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது தங்கையான நித்தியாவை பிரசவத்திற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, காத்திருப்போர் பகுதியில் அமர்ந்திருந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை நித்தியாவிற்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்த தகவல் தெரிவிக்க செவிலியர்கள் அவரது உறவினரை அழைத்தனர். அப்போது அமர்ந்த நிலையில் தூங்கியபடி இருந்த விக்னேஷை அருகில் இருந்தவர்கள் எழுப்பினர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து செவிலியர்கள் அவரை பரிசோதனை செய்ததில், இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் அவரது உறவினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் ஏற்கனவே அவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்தாக கூறப்படுகிறது.

Related Stories: