சீர்காழியில் உலக நன்மை வேண்டி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்

சீர்காழி, டிச.14: சீர்காழியில் உலக நன்மை வேண்டி விஸ்வாஸ் சத்சங்கம் சார்பில் விஷ்ணு சகஸ்ரநாமம் மகாமந்திரம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகாபாரதத்தில் பீஷ்மர் தருமருக்கு உபதேசித்ததே  விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும். தேவி, பூதேவி சமேத விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். அதன்படி பக்தர்கள் ஒன்றிணைந்து சகஸ்ரநாமம் பாராயணம் நடந்தது. முன்னதாக திருஇந்தளூரில் இருந்து கொண்டுவரப்பட்ட தேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சகஸ்ரநாமம் முற்றோதல் தொடங்கியது. டாக்டர்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

ஜெயின் சங்க நிர்வாகி கியான்சந்த் முன்னிலை வகித்தார்.விஸ்வாஸ் நிறுவனர் சென்னை தரன், நிர்வாக இயக்குனர்கள் கிருஷ்ணன், சிவராமகிருஷ்ணன், டாக்டர் ராமபத்திரன், டாக்டர்.கோதண்ராமன், கிரிஜா, சுஜாதா, சீனிவாசன் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்று மந்திரங்களை பாராயணம் செய்தனர். ஏற்பாடுகளை சீர்காழி விஸ்வாஸ் சங்க அமைப்பாளர்கள் சியாமளா, சௌமியா, விஜயலெட்சுமி செய்திருந்தனர். முன்னதாக ஆசிரியர் சவுந்தரபாண்டியன் வரவேற்றார். முடிவில் அமைப்பாளர் மதிவாணன் நன்றி கூறினார்.

Related Stories: