×

நாகை உழவர்சந்தை அதிமுக ஆட்சியில் மூடப்பட்ட சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க கோரி கலெக்டரிடம் மனு

மயிலாடுதுறை டிச.14: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள்குறைதீர் முகாமில் காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் அலித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: மயிலாடுதுறை தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை எம்.ஜி.ஆரால் 1987ல் திறக்கப்பட்டு, 9 லட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யும் வாய்ப்பு மிகுந்த இந்த இடத்தில் இந்த ஆலையின் அரவைக்குப் போக மீதியை திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள ஆலைகளுக்கு 4 லட்சம் டன் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் இந்த ஆலையின் கையிருப்பு ரூ.15 கோடி இருந்தது. மிகவும் லாபரகமா இருந்த ஆலையை விரிவாக்கம் செய்வதாகக்கூறி அதை சரியாக செய்ய முடியாமல் 2வது யூனிட் முயற்சி தோல்வியடைந்தது.

சிறந்த முறையில் இயங்கிவந்த ஆலை நலிவடைய ஆரம்பித்தது, நிர்வாக குளறுபடியால் குறிப்பிட்ட காலத்தில் வெட்டவேண்டிய கரும்பு வெட்டாததால் வயலிலேயே காய்ந்து கருகி வேறு ஆலைக்கு அனுப்பி நட்டத்தை ஏற்படுத்தியது, பணப்பட்டுவாடா ஆவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆலை மூடப்பட்டது. இன்றைக்கும் ஆலை யை இயக்கினால் தேவைக்குமேல்கரும்பு உற்பத்தி இருப்பதுடன் விவசாயிகளுக்கு மிகவும் லாபகரமாக இருக்கும் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 110 விதியின்கீழ் அறிவித்த ரூ.56 கோடியை விடுவித்திருந்தாலே இந்த ஆலை இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கும் அதையும் செய்யவில்லை. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது அதன் இறுதி உத்தரவில், தமிழக அரசின் சர்க்கரை ஆணையரிடம் பிரதிநிதிகள் இந்த ஆலையை ஏன் திறக்கவேண்டும் என்பதற்கான சரியான காரணங்களை 4 வாரத்திற்குள் அளிக்க வேண்டும்.

அதை ஏற்றுக்கொண்ட சர்க்கரைத்துறை ஆணையர் 8 வாரங்களில் உரிய நியாயமான முடிவை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஆகவே இந்த ஆலையை திறப்பதற்கு பரிசீலித்து விரைந்து முடிவெடுத்து கூட்டுறவு சர்க்கரை ஆலைளுக்கு உதவிடும் தேசிய கூட்டுறவு சர்க்கரை வளர்ச்சி நிதிக்கழகம் அல்லது கரும்பு அபிவிருத்தி நிதிக்கழகத்தின் மூலமாகவோ எந்தவிதத்திலோ இந்த ஆலையை இயங்கச் செய்ய உரிய பரிந்துறையை அரசுக்கு அனுப்ப மாவட்ட கலெக்டர் பணிந்து அனுப்ப கேட்டுக்கொள்வதாக தெரிவித்திருந்தனர்.

Tags : AIADMK ,Naga ,Uzhavarsanta ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...