×

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் பெண்கள், குழந்தைகளை இழிவுபடுத்தும் வகையில் கேள்வி திரும்பபெற வேண்டும்

கரூர், டிச. 14: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் பெண்கள், குழந்தைகளை இழிவுபடுத்தும் வகையிலான கேள்வியை திரும்ப பெற வேண்டும் என்று எம்பி ஜோதிமணி வலியுறுத்தி உள்ளார். கரூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மத்திய அரசின் நிதி உதவி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் எம்பி ஜோதிமணி கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து, பல்வேறு கோரிக்கைகளுடன் முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வில் பிற்போக்குத்தனமான, பெண்களை, குழந்தைகளை இழிவுபடுத்தும் வகையில் வினா கேட்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ், பிஜேபி சித்தாந்தத்தை திணிக்கும் வகையில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இது குறித்து துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

புதிய கல்வி கொள்கையில் என்ன வரப்போகிறது என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக இந்த வினாத்தாள் அமைந்துள்ளதாக கருதுகிறேன். இதனால்தான், புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். இதனை நடைமுறைப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பெண்கள் எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகு அடிமைத்தளத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக படித்து, நம்பிக்கையுடன் அடையாளங்களை மீட்டு வரும் நிலையில் இதுபோன்ற நடவடிக்கை கண்டனத்துக்கு உரியது. இது குறித்து நாடாளுமன்ற கூட்டுத்தொடரில் ஒன்றிய அரசின் கற்கால சிந்தனைக்கு எதிராக குரல் எழுப்பப்படும் என்றார்.

Tags : CBSE ,
× RELATED வரும் கல்வியாண்டில் 3 முதல் 6ம்...