×

போக்குவரத்து நெரிசலை தீர்க்க நாகர்கோவிலில் ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

நாகர்கோவில், டிச.14:  நாகர்கோவிலில் தினசரி போக்குவரத்து நெருக்கடி  ஏற்பட்டு வருகிறது. தினமும் சராசரி 500 புதிய வாகனங்கள் இறக்குமதி ஆவதுடன், வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களும் அதிகரித்துள்ளது. ஆனால், சாலைகள் குறுகலகவே உள்ளன. மேலும் குறுகிற சாலைகள் பாதாள சாக்கடை பணிகள் காரணமாக குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளன.  இந்நிலையில் நகரின் பல பகுதிகளிலும், சாலைகளில் கடைகளில் உள்ள விற்பனை பொருட்களை வைப்பதால், மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுதவிர கடைக்கு வரும் வாகனங்களும் குறுகிய சாலைகளில் முக்கிய நேரங்களிலும் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின்படி, நகரமைப்பு ஆய்வாளர்கள் கெபின் ஜாய், சந்தோஷ், மகேஸ்வரி மற்றும் துரக்கா தேவி ஆகியோர் அவ்வை சண்முகம் சாலையில் ஒழுகினசேரி சந்திப்பு முதல்  கோட்டாறு சந்திப்பு வரையிலும்,  செம்மாங்குடி சாலை, டிஸ்லெரி சாலை,  ஜோஸ்வா தெரு ( பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி முதல் ஏசுராஜா ஆலயம் வரை),  சற்குண வீதி கால்வாய், ராமன்புதூர்  சந்திப்பு முதல்  தட்டான்விளை சாலை, எஸ்.எல்.பி தெற்கு சாலை,  கணேசபுரம் சாலை,  நாகராஜா கோயில் ரத வீதிகள், நீதிமன்ற சாலை,  கேப் சாலை ஆகிய பகுதிகளில், கடைகளுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகள், விறபனைக்கு பயன்படுத்தப்பட்ட மேஜைகள், பொருட்கள் போன்றவை அகற்றப்பட்டன. இதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : Nagercoil ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...