×

மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சக்திமாலை இருமுடி விழா தொடங்கியது: லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்

மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 202122ம் ஆண்டுக்கான சக்திமாலை இருமுடிவிழாவினை நேற்று ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வருடந்தோறும் சக்திமாலை இருமுடி விழா நடப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று துவங்கிய இருமுடி விழா வரும் ஜனவரி மாதம் 17ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. அதற்காக, பக்தர்கள் தைப்பூச ஜோதி விழாவிற்கு முன்பாக சக்திமாலை அணிந்து, சக்தி விரதம் இருந்து அம்மனுக்கு இருமுடி எடுத்து வந்து சுயம்பு அன்னைக்கு அபிஷேகம் செய்கின்றனர்.

ஐந்து அல்லது மூன்று நாள் விரதம் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் குடும்பம் குடும்பமாக இருமுடி செலுத்துவது வழக்கமாக உள்ளது. இதனை அடுத்து ஜனவாரி 2022, 18ம் தேதி அன்று பங்காரு அடிகளார் ஏற்றும் தைப்பூச ஜோதி விழா விமாரிசையாக நடைபெற உள்ளது. இந்நிலையில், இருமுடிவிழா நேற்று அதிகாலை 3 மணி அளவில் மங்கள இசையுடன் விழா துவங்கியது. 6 மணிக்கு கருவறை மண்டபத்தில் இயற்கை வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 6.15 மணிக்கு இருமுடி அபிஷேகத்தை லட்சுமி பங்காரு அடிகளார் துவங்கி வைத்தார். முதலில் 9 சிறுமியார்களும், 9 தம்பதியார்களும் அபிஷேகம் செய்தனர்.  பின்னர், பக்தர்கள் அபிஷேகம் செய்தனர்.

தென்னக ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்குகிறது. மேலும், வழக்கமாக செல்லும் பல விரைவு ரயில்களும் மேல்மருத்தூரில் நின்று செல்கின்றன. விழா ஏற்பாடுகளை இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் துணைத்தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார் மற்றும் தேவி ரமேஷ் வழிகாட்டுதலுடன் ஆன்மிக இயக்கத்தின் பல்வேறு குழுவினார் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags : Sakthimalai Irumudi festival ,Adiparasakthi ,Siddhar Peetha ,Melmaruvathur ,Lakshmi Bangaru Adigalar ,
× RELATED ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில்...