×

மேச்சேரி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

மேச்சேரி, டிச.13: மேச்சேரி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேச்சேரி சாம்ராஜ் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். விவசாயியான இவரது மகன் வெங்கட்(17). இவர், மேச்சேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று விடுமுறை என்பதால் அருகில் உள்ள எம்.காளிப்பட்டிக்கு சென்றுள்ளார். பின்னர், அங்குள்ள ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். அதனைக்கண்டு அருகில் இருந்தவர்கள் மாணவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு ஏற்கனவே மாணவன் இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்த தகவலின்பேரில், மேச்சேரி போலீசார் விரைந்து சென்று மாணவன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Machcheri ,
× RELATED சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள பழைய...