இலக்கியம்பட்டி ஏரியில் பரிசல் சவாரிக்கு நடவடிக்கை

தர்மபுரி, டிச.13: தர்மபுரி இலக்கியம்பட்டி ஏரியில் பரிசல் இயக்கி, பொழுது போக்கும் இடமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி -சேலம் மெயின் ரோட்டில் உள்ள இலக்கியம்பட்டி ஏரி சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். வத்தல்மலை அடிவார பகுதியில் மழை பெய்யும் சமயங்களில் இந்த ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும். தொடர் மழையால் தற்போது ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், உபரிநீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏரியை சுற்றிலும் மரங்கள் நிறைந்துள்ளதால் இயற்கை நிறைந்த பகுதியாக காட்சியளிக்கிறது. எனவே குடும்பத்துடன் பொழுது போக்கும் மையமாக, இப்பகுதியை சுத்தம் செய்து மாற்ற வேண்டும். ஏரியில் பரிசல் இயக்கி, இயற்கையின் அழகை சுற்றிபார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: