×

ராஜபாளையத்தில் ரத்ததான முகாம்

ராஜபாளையம், டிச. 13: ராஜபாளையம் தொகுதியில் நகர மாணவர் அணி சார்பாக திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மகப்பேறு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடந்தது. ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் முகாமை தொடங்கி வைத்து, ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தலைமை மருத்துவர் சுரேஷ், திமுக நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மாணவரணி நிர்வாகிகள் இக்சாஸ் இப்ராஹிம், நாகேஷ்வரன், மதன், அருண் உலகநாதன், சத்தியமூர்த்தி, கார்த்திக், பிரபு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!