×

உத்தமபாளையம் பழைய தாலுகா அலுவலகத்தில் அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

உத்தமபாளையம், டிச. 13: உத்தமபாளையத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு 72 படுக்கை வசதியுடன் அவசர சிகிச்சை, மகப்பேறு, அறுவை சிகிச்சை, இயற்கை யோகா பிரிவு, சித்தா பிரிவு ஆகியவை உள்ளன. இங்கு தினசரி 800க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், போதிய இடவசதி இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். மேலும், அரசு மருத்துவமனை அருகே பழைய தாலுகா அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகம் கடந்த 1962 முதல் இயங்கி வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில், ரூ.2.50 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, தாலுகா அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது. இதனால், அரசு மருத்துவமனை அருகே உள்ள பழைய தாலுகா அலுவலக கட்டிடம் தற்போது பயன்பாடு இல்லாமல் உள்ளது. எனவே, பழைய தாலுகா அலுவலகத்தை அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஒப்படைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Uththamapalaiyam ,
× RELATED உத்தமபாளையம் ஒன்றியக்குழு தலைவர்...