மாவட்ட கிரிக்கெட் போட்டி மேனகா மில் அணிக்கு கோப்பை

தேனி, டிச. 13: தேனி அருகே, தப்புக்குண்டுவில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் மாவட்ட கிரிக்கெட் சங்கம், மேனகா மில் சார்பில் மாவட்ட அளவிலான 20:20 கிரிக்கெட் போட்டி நடந்தது. நாக் அவுட் முறையில் நடந்த இப்போட்டியில் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. நேற்று நடந்த இறுதி போட்டியில் தேனி மேனகா மில் அணியும், ரத்தினம் சிசி அணியும் மோதின.

முதலில் பேட் செய்த ரத்தினம் அணி 16.5 ஓவரில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 103 ரன்களை பெற்றது. இரண்டாவதாக களம் இறங்கிய மேனகா மில் அணி 12.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. சிறந்த பேட்ஸ்மேனாக ரத்தினம் சிசி அணியை சேர்ந்த காந்த், சிறந்த பவுலராக அதே அணியை சேர்ந்த ராகவன், ஆல்ரவுண்டர் பரிசை மேனகா மில் அணியைச் சேர்ந்த வெங்கடேசனுக்கு வழங்கப்பட்டது. போட்டி முடிவில் சுழற்கோப்பையை மேனகா மில் அணி பெற்றது.

இதனையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவரும், மேனகா மில் நிர்வாக இயக்குநருமான மணிவண்ணன் தலைமை வகித்தார். தேனி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளரும், மேனகா மில் இயக்குநருமான லட்சுமண் நாராயண் முன்னிலை வகித்தார். விழாவில், தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்கரே கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

Related Stories: