×

அழகர்கோவில் வரும் பக்தர்களுக்கு நிரந்தர தடுப்பூசி முகாம் கோவில் நிர்வாகம் ஏற்பாடு

அலங்காநல்லூர், டிச.13: மதுரை மாவட்டம், அழகர்கோவில் மலையடிவாரத்தில் கள்ளழகர் கோயில், மலை மீது ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோயில் மற்றும் ராக்காயி அம்மன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு மதுரை மாவட்டமின்றி தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு வசதியாக கோடியல் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழக அரசு 18 வயது மேற்பட்ட 45 வயதுக்குட்பட்ட அனைவரும் முதல் மற்றும் இரண்டாவது தவணைதடுப்பூசி செலுத்திக் கொள்ள வசதியாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் தொடர்ந்து மருத்துவத்துறை மூலம் முகாம் நடத்தி வருகிறது. மேலும் கோயில் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்கள் செல்லக்கூடிய பக்தர்களின் வசதிக்காக அந்தந்த கோயில் நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பாக தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல்அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கோட்டைவாசல் முன்பு நிரந்தர முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் வரும் பக்தர்கள் தங்களது உடல்நிலைக்கு ஏற்றவாறு மருத்துவக்குழுவின் ஆலோசனையின் பேரில், முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகளை இந்த முகாம்களில் செலுத்திக் கொள்ள வசதியாக அழகர்கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Tags : Algarve ,
× RELATED அழகர் கோயில் சாவியை காக்கும் பதினெட்டாம் படி கருப்பு