ஐவர் கால்பந்து போட்டி

திண்டுக்கல், டிச.13:திண்டுக்கல் தாஸ் சாக்கர் சார்பாக 9 வயது, 13 வயது மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஐவர் கால்பந்தாட்ட போட்டிகள் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பின்புறம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. 13 வயது பிரிவிற்கான முதல் போட்டியினை திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தாளாளர் அருட்தந்தை அருள்தாஸ், கால்பந்து கழக செயலாளர் சண்முகம் துவக்கி வைத்தனர்.

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 9 வயதில் நான்கு அணிகள், 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 10 அணிகள், 18 வயதில் 12 அணிகள் என மொத்தம் 26 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், இரண்டாவது பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பை, பதக்கங்கள் வழங்கப்பட்டது.

13 வயது பிரிவில் முதல் பரிசு ரூ.4 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.2 ஆயிரம் சுழற் கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் தாஸ் சாக்கர்ஸ் கிளப்பின் நிறுவனர் ஒடின் ராபர்ட் ரவி மற்றும் தாஸ் சர்க்கஸ் அணியினர் செய்திருந்தனர்.

Related Stories: