ஆத்தூர் தொகுதியின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

சின்னாளபட்டி, டிச.13: கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆத்தூர் தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.  விரைவில் ஆத்தூர் தொகுதியின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி வைக்கப்படும் என்றார். கோரிக்கை மனு கொடுக்க வந்த பொதுமக்கள், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன்,  முன்னாள் ஒன்றிய தலைவர் கு.சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், அம்பை ரவி, ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் பஞ்சம்பட்டி மணி உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். ஆத்தூர் தொகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் சேதம் அடைந்திருந்ததால் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் எம்பி நிதி கொண்டு சீரமைக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், பொதுமக்களின் நலனை எனது முக்கிய வேலையாக  கருதி செயல்பட்டு வருகிறேன். விரைவில் ஆத்தூர் தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.

Related Stories: