×

பிக்கட்டி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் வெளியீடு 15 வார்டுகளில் 5,479 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்

மஞ்சூர், டிச.13: பிக்கட்டி பேரூராட்சியில் 15 எவார்டுகளில் மொத்தம் 5ஆயிரத்து 479 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளார்கள். நீலகிரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இந்த பேரூராட்சியின் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 479 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இதில் 1வது வார்டில் ஆண்கள்-120, பெண்கள்-135 (மொத்தம்255) வாக்காளர்களும், 2வது வார்டில் ஆண்கள்-191, பெண்கள்-196 (மொத்தம்387) 3 வதுவார்டில் ஆண்கள்-212, பெண்கள்-243 (மொத்தம்455) 4 வதுவார்டில் ஆண்கள்-128, பெண்கள்-152 (மொத்தம்280) 5வதுவார்டில் ஆண்கள்-160, பெண்கள்-170 (மொத்தம்330) 6வது வார்டில் ஆண்கள்-234, பெண்கள்-204 (மொத்தம்438) 7வதுவார்டில் ஆண்கள்-269, பெண்கள்-313 (மொத்தம்582) 8வதுவார்டில் ஆண்கள்-154, பெண்கள்-176 மொத்தம்330) 9வதுவார்டில் ஆண்கள்-167, பெண்கள்-181, (மொத்தம்348) 10வதுவார்டில் ஆண்கள்-1145, பெண்கள்-158 (மொத்தம்303), 11வதுவார்டில் ஆண்கள்-51, பெண்கள்-51 (மொத்தம்102) 12வதுவார்டில் ஆண்கள்-210, பெண்கள்-222 (மொத்தம்432) 13வதுவார்டில் ஆண்கள்-218, பெண்கள்-233 (மொத்தம்451), 14வதுவார்டில் ஆண்கள்-196, பெண்கள்-199 (மொத்தம்408) 15வார்டில் ஆண்கள்-179, பெண்கள்-199 (மொத்தம்378) வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

பிக்கட்டி பேரூராட்சியை பொருத்தமட்டில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் ஆண் வாக்காளர்கள் 2,634 பெண் வாக்காளர்கள் 2,845 பேர் உள்ளனர். ஆண் வாக்காளரைவிட பெண் வாக்காளர்கள் 211 பேர் அதிகம் உள்ளனர். மேலும் இப்பேரூராட்சிகுட்பட்ட 11வது வார்டான குந்தா கீழ்முகாமில் ஆண் வாக்காளர்கள் 51, பெண் வாக்காளர்கள் 51 பேர் என சரிக்கு சமமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Piccadilly Municipality ,
× RELATED பெரியநாயக்கன்பாளையம் அருகே...