×

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கே.எம்.சி.ஹெச்.ல் இலவச முகாம்

கோவை, டிச.13: கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது ஆலோசனை இலவச முகாம் இன்று முதல் 31ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆரம்ப கட்டத்தில் உள்ள புற்றுநோயை குணமாக்க வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

புற்றுநோய் என கண்டுபிடித்து சொன்ன டாக்டரை முழுமையாக நம்பினாலும் கூட எதற்கும் இன்னொரு டாக்டரை பார்த்து ஆலோசனை கேட்பது நல்லது என்கிறது மருத்துவ உலகம். இரண்டாவது ஆலோசனை, அனைத்து நோய்களுக்கும் பொருந்தும். புற்றுநோய் உள்ளதா?இல்லையா? சரியான சிகிச்சை என்ன என்பதை அறிய எந்த டாக்டரை பார்ப்பது என்ற குழப்பம் ஏற்படலாம். செலவுகளும் ஆகலாம். ஆனால், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில்,இரண்டாவது ஆலோசனை, இலவசமாக கிடைக்கிறது.

மேலும், பரிசோதனை தேவைப்பட்டால் சலுகை கட்டணத்தில் செய்து கொள்ளலாம். எவ்வித கட்டணமும் இல்லாமல், ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும். மேற்கொண்டு பரிசோதனை தேவைப்பட்டால் சலுகை கட்டணத்தில் செய்து கொள்ளலாம் முன்பதிவு செய்ய 733 9333 485 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : KMCH ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...