×

சென்னை நுங்கம்பாக்கத்தில் 18 தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்கும் கால்பந்து போட்டி: தயாநிதி மாறன் எம்.பி தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் 18 தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்குபெறும் கால்பந்து போட்டி நேற்று துவங்கியது. இதை அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், யூகே, கொரியா, ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கு பெறுகின்றனர். நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கூறியதாவது: கர்நாடகாவில் பாஜ ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஆளும் பாஜ அரசை எதிர்த்து அல்லது முதல்வரை விமர்சித்தாலும் சிறைச்சாலை தான். பாஜ ஆட்சி நடத்தக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற செயல்கள் நடைபெற்று வருகிறது. இவற்றை எதிர்த்து அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள். வலைதளங்களில் நெட்டிசன்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு பாஜவினர் முதலில் பதில் சொல்லட்டும். 17 மாநிலங்களில் எவ்வாறு அவர்கள் ஆட்சிக்கு வந்தனர்.

சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டியும், வருவாய் துறையினரை வைத்து மிரட்டியும், சிபிஐ வைத்து மிரட்டியும் தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தனர். பாஜ குதிரை பேரம் நடத்தி கொல்லைப்புறமாக வந்துதான் ஆட்சியை பிடித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் ஜோதி ஆதித்ய சிந்தியாவை மிரட்டி அவர்கள் பக்கம் இழுத்து ஆட்சியை பிடித்தனர். இதேபோல் கர்நாடகாவிலும் ஆட்சியை கலைத்துதான் இவர்கள் ஆட்சியை பிடித்தனர். இதைத்தான் அவர்கள் ஆளும் 17 மாநிலங்களிலும் செய்து வருகின்றனர். முதலில் அவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும். பாஜவினர் குறை கூறுவதை மட்டுமே ஒரு தொழிலாக வைத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Nungambakkam ,Chennai ,Dayanidhi Maran ,
× RELATED பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...