கோவில்பட்டி சண்முகநகரில் ராணி தமிழரசன் பியூல்ஸ் திறப்பு விழா

கோவில்பட்டி, டிச.13: கோவில்பட்டி சண்முகநகரில் ராணி தமிழரசன் பியூல்ஸ்சை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். கோவில்பட்டி- கடலையூர் மெயின்ரோடு சண்முகநகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராணி தமிழரசன் பெட்ரோல் பங்க் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். பெட்ரோல் பங்கை திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி  திறந்து வைத்தார். டாக்டர்கள் தினேஷ் காமராஜ், சண்முகபிரியா மற்றும் ராஜாகார்த்திக், டாக்டர் இன்பலதா, பாபுராஜ், தர்ஷனா, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் உதவி மேலாளர் அபிஜித் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். செபத்தையாபுரம் ரவீந்திரன், தெய்வரதி, ராஜரத்தினம், சுகந்தி முதல் விற்பனையை துவக்கி வைத்தனர்.

விழாவில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன், அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன், இலுப்பையூரணி ஊராட்சி தலைவர் செல்வி சந்தானம், வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் ஏஞ்சலா, மாவட்ட விவசாய அணி துணைச்செயலாளர் சந்தானம், கோவில்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுந்தரேஸ்வரி அசோக், பாரதி ரவிக்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தங்கமாரி, வடக்கு மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் நாகராஜன் மற்றும் எவரெஸ்ட் ராமச்சந்திரன், ஆர்.வி.குமார், சுமதி, சுஜிதா, செல்வகீர்த்தனா, கிஷோர்குமார், ரவி, வளர்மதி, சிவக்குமார், அஸ்வின், முருகன், வாசுகி, இளையராஜா, நித்யா, பாபுராஜ், தர்ஷனா, டினுமுகிலன், ஓய்வுபெற்ற ஆசிரியை சண்முகக்கனி, மஹா விஷ்ணு ராஜன், உஷா, செல்வம், ஜெனோவா ராணி, கார்மல் தாமஸ், ஜோகன் செபஸ்டின் உள்பட பலர் பங்கேற்றனர்.

விழாவிற்கு வந்திருந்தவர்களை ராணி தமிழரசன் பியூல்ஸ் உரிமையாளர் தமிழரசன், சகாயராணி மற்றும் ரத்னகுமார், ஜெய மீனாட்சி, இளங்கோ, தனலட்சுமி, பூசாரிபட்டி திமுக கிளைச் செயலாளர் பன்னீர்செல்வம், சந்திரகலா ஆகியோர் வரவேற்றனர்.

Related Stories: