×

குளத்தூர் அருகே நீரிழிவு நோய் கருத்தரங்கம்

குளத்தூர், டிச.13: குளத்தூர் அருகே உள்ள வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நீரிழிவு நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். அன்னை தெரசா சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜபாண்டி, ஆசிரியர்கள் கிரேஸ்லின், அந்தோணி இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்னை தெரசா சங்க செயலாளர் ஜேம்ஸ் அமிர்தராஜ் வாழ்த்தி பேசினார். சென்னை மருந்து நிறுவனங்களின் ஓய்வு பெற்ற தலைமை பயிற்சி மேலாளர் ஆலந்தூர் ராதாகிருஷ்ணன் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு தகவல்களை மாணவர்களிடம் பேசினார். முகாமில் சிறப்பு விருந்தினர்களுக்கு அன்னை தெரசா சங்கத்தினர் விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். உதவி தலைமை ஆசிரியை புளோரிடா நன்றி கூறினார்.

Tags : Diabetes Seminar ,Kulathur ,
× RELATED குளத்தூர் வாக்குசாவடியில் சுயேட்சை வேட்பாளர் தர்ணா