×

மறுகால் பாயும் தண்ணீரால் பள்ளம் திருப்பணிசெட்டிகுளம் குளத்தின் தடுப்பு சுவர் உடையும் அபாயம் சீரமைத்திட பொதுமக்கள் கோரிக்கை

ஏரல், டிச. 13:  சாயர்புரம் அருகே குளத்தில் மறுகால் பாயும் தண்ணீரால் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உருவானதால் தடுப்பு சுவர் உடையும் ஏற்பட்டுள்ளதால் அதனை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயர்புரம் அருகே திருப்பணிசெட்டிகுளத்தில் உள்ள குளம் மழைக்காலத்தில் வரும் காட்டாற்று தண்ணீரால் பெருகும். இந்த குளத்தை நம்பி பல ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. மேலும் குளத்தில் தேங்கி கிடக்கும் தண்ணீரால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீரும் உயரும். தற்போது பருவமழை அதிகளவு பெய்துள்ளதால் இந்த குளம் நிரம்பி காணப்படுகிறது. தொடர் மழையால் மதகு அருகில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரை தாண்டி தண்ணீர் வெளியேறி வந்தது. இதனால் தடுப்பு சுவர் அருகில் மண் அரிப்பு ஏற்பட்டு 4 அடி பள்ளமானது. இந்த பள்ளத்தை சீரமைத்து கான்கிரிட் தளம் அமைக்க வேண்டும். இல்லாவிடில் தடுப்பு சுவர் உடைந்து தண்ணீர் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குளத்தின் மதகு அருகில் தடுப்பு சுவர் பகுதியில் விரைவாக கான்கிரிட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruppanichettikulam pond ,
× RELATED (வேலூர்) 9ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி வேலூர் அருகே சோகம்