நெல்லை, தென்காசி, வள்ளியூர் சென்டர்களில் ஹூண்டாய் கார்களுக்கான ஸ்மார்ட் கேர் கிளினிக் முகாம்

நெல்லை, டிச. 12: ஹூண்டாய் கார் வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக ஸ்மார்ட் கேர் கிளினிக் முகாம் சுசீ ஹூண்டாயின் நெல்லை, தென்காசி, வள்ளியூர் சர்வீஸ் சென்டர்களில் டிச.20ம் தேதி வரை நடக்கிறது. முகாமில் மெக்கானிக்கல் உதிரிபாகங்களுக்கு 10% தள்ளுபடி, மெக்கானிக்கல் லேபர் சார்ஜில் 20% வரை தள்ளுபடி, வாகன சுத்திகரிப்பு (சானிடைசேஷன்) மற்றும் ஒருவருட சாலையோர உதவி திட்டக் கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. முகாமில் நாடு முழுவதும் பங்கேற்கும் 1000 அதிர்ஷ்டசாலிகளுக்கு அடுத்த சர்வீஸில் இலவச இஞ்ஜின் ஆயில், ஆயில் பில்டரும் வழங்கப்படுகிறது. மேலும் புதிய ஹூண்டாய் கார் வாங்கிட விழையும் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைத் திட்டங்களையும் ஹூண்டாய் நிறுவனம் வழங்குகிறது.

சுசீ ஹூண்டாயின் நெல்லை சர்வீஸ் சென்டரில் நடந்த விழாவில் முதன்மை சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற  வாடிக்கையாளர்களில் கந்தன் நாயர் முகாமை துவக்கி வைத்தார். ஒய்.பி.ஜே.அகஸ்டின் ராஜ் குத்துவிளக்கேற்றினார். முகாமுக்கு சுசீ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். குழுமத்தின் செயல் இயக்குநர் ஆரெம்.கே.ராமநாதன் முன்னிலை வகித்தார். இதில் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 ஏற்பாடுகளை சுசீ ஹூண்டாய் நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் (விற்பனை) தியோடர், பொது மேலாளர் (சர்வீஸ்) ராமநாதன் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: