×

கந்தர்வகோட்டை பகுதிகளில் நெற்பயிர்களுக்கு தீவிர பூச்சி மருந்து அடிக்கும் பணி

கந்தர்வகோட்டை, டிச.13: கந்தர்வகோட்டை பகுதிகளில் நெற்பயிருக்கு பூச்சி மருந்து அடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நல்ல முறையில் பெய்ததால் அனைத்துக் குளங்களிலும் நீர் நிரம்பியது. மேலும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. விவசாயிகள் தங்களது நிலங்களில் நெல் நாற்று நட்டு, களை பறித்து, நெல் பயிர்களில் தற்போது கதிர் வரத்துவங்கியுள்ளதால் இலை பூச்சிகள் தாக்கத் தொடங்கியது. விவசாயிகள் செய்வது அறியாது வேளாண்மைத் துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை பெற்று அவர்கள் கூறிய மருந்துகளை உரிய அளவில் தண்ணீரில் கலந்து பேட்டரி ஸ்ப்ரேயர் மூலம் நெல் பயிர்களை தாக்கும் பூச்சிகளை கொள்ள மருந்து அடித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பூச்சிகளை இப்படியே விட்டால் கதிர்களில் உள்ள பாலை உறிஞ்சி விடும். கதிர் முற்றாமல் பதராக மாறிவிடும். எனவே நெற்பயிர்களுக்கு பூச்சி மருந்து அடித்து பயிர்களை காக்க வேண்டிய தருணம் இது என தெரிவித்தனர்.

Tags : Kandarwakottai ,
× RELATED கந்தர்வகோட்டை பகுதியில் காய்கறி செடிகள் அமோக விற்பனை