நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவுறுத்தல்

அரியலூர், டிச.13: திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும் என நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மாவட்ட செயலாளரும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ் சிவசங்கர் அறிவுறுத்தினார். அரியலூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் அரியலூர் புறவழி சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக சட்ட திட்ட திருத்த குழு உறுப்பினர் சுபா. சந்திரசேகர் தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்துகொண்டு தீர்மானங்களை விளக்கி பேசினார். திமுக இளைஞரணி செயலாளர் திருவல்லிக்கேணி -சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிளைக் கழகங்கள் தோறும் பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்.

ஒரு முதல்வரால் நாட்டிற்கு எவ்வளவு முடியுமோ அதைவிட அதிகமாகவே பணியாற்றி வருகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதியே பாராட்டுகின்ற அளவிற்கும், வட இந்திய ஊடகங்கள், பத்திரிகைகள் பாராட்டுகின்ற அளவிற்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நம் தலைவரை இந்த செயற்குழு மகிழ்ச்சியோடு பெருமை கொள்கிறது. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சிகள் மற்றும் உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளில் கழக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும்.

இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் விபத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே. கணேசன் துணைவியார் பவானி அம்மையார் மறைவிற்கும் மற்றும் மாவட்டத்தில் மறைந்த திமுக பிரமுகர்கள் அவரது உறவினர்கள் மறைவிற்கு திமுக சார்பில் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் பெருநற்கிள்ளி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் பொய்யாமொழி, மாவட்ட துணை செயலாளர்கள் தனபால், கணேசன், லதாபாலு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாளை.அமரமூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: