ஆண்டிமடம் பகுதியில் மின்விநியோகம் இன்று நிறுத்தம்

ஆண்டிமடம்,டிச.13: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் உதவி செயற் பொறியாளர் சிலம்பரசன் ஒர் அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளதாவது: நாகம்பந்தல் துணை மின் நிலையம் உயரழுத்த மின்பாதையில் சிறப்பு பராமரிப்பாக மரம் வெட்டும் பணிகளை மேற்கொள்ள இருப்பதால், இங்கிருந்து மின்வினியோகம் பெரும் பகுதிகளான நாகம்பாந்தல், மேல வல்லம், கீழ வல்லம், திருராமன், பெரியகருக்கை, சின்னகருக்கை, மற்றும் ராங்கியம் ஆகிய கிராமங்களில் இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை (சுமார் 4 மணி நேரம் மட்டும்) மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: