×

அரியலூர் விநாயகர் கோயிலில் ஐயப்பனுக்கு மண்டலாபிஷேகம்

அரியலூர்,டிச.13: அரியலூர் நகர் பகுதியில் அமைந்துள்ளது பாலபிரசன்ன சக்தி விநாயகர் கோயில். இந்த கோயிலில் அமைந்துள்ள ஐயப்பனுக்கு 14ம் ஆண்டு மண்டலாபிஷேக பூஜை நடைபெற்றது. இதனையொட்டி ஐயப்ப பக்தர்கள் பேருந்து நிலையத்தில் உள்ள விநாயகர் ஆலயத்திலிருந்து பால்குடம் எடுத்து கொண்டு மார்க்கெட் தெரு, தேரடி, வெள்ளாழதெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோயிலில் வீற்றிருக்கும் ஐயப்பனுக்கு சந்தனம், இளநீர், தயிர், பால், பஞ்சாமிர்தம், விபூதி, நெய் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யபட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யபட்டு ஆராதனை காட்டபட்டது. இதனையடுத்து கன்னிபூஜை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. இதில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

Tags : Iyappan ,Ariyalur Ganesha Temple ,
× RELATED புரட்டாசி மாத பூஜைகளுக்காக நடை...