×

ஆயக்காரன்புலத்தில் திமுக சார்பில் 300 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

வேதாரண்யம், டிச.13: வேதாரண்யம் தாலுக்கா மருதூர் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆயக்காரன்புலம் கொச்சிகுத்தகை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வள்ளுவர் துவக்கப்பள்ளி உள்ளிட்ட மூன்று பள்ளிகளுக்கு திமுக இளைஞரணி சார்பாக 300 மாணவ, மாணவிகளுக்கு பேனா, பென்சில், நோட்டு புத்தகம், வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ் உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நாகை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அசோகன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் விக்னேஷ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் உதயம் முருகையன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைராஜ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அருள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆசைத்தம்பி, வட்டார கல்வி அலுவலர் தாமோதரன், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Ayakkaranpulam ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்