×

சாலைக்கிராமத்தில் பட்டா சிறப்பு முகாம்

இளையான்குடி, டிச. 11:  இளையான்குடி வட்டம், சாலைக்கிராமத்தில்  கணினி திருத்த பட்டா சிறப்பு முகாம் நேற்று நடந்தது.  சிவகங்கை மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேலு தலைமை வகிக்க, இளையான்குடி தாசில்தார் ஆனந்த்,  தனி தாசில்தார் பஞ்சவர்ணம், மண்டல துணை  தாசில்தார் பரிமளா,  கவுன்சிலர் செல்வி முன்னிலை வகித்தனர். முகாமில் 33 பட்டா மாற்ற மனுக்கள் பெறப்பட்டு, 14 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதில் ஆர்ஐ கிருஷ்ணவேணி, விலை சரவணன், கிராம உதவியாளர் மாதவன், நில அளவு பிரிவு  வட்ட நில அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Patta ,Road Village ,
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி