×

திருப்புல்லாணி வேளானூரில் வேளாண் வளர்ச்சி திட்ட பயிற்சி

ராமநாதபுரம், டிச. 11:  திருப்புல்லாணி அருகே வேளானூரில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பயிற்சி முகாம் நடந்தது. அரசு மானியத்தில் வழங்கவுள்ள சூரிய சக்தி மின் உலர்த்தி, மின்வேலி, பம்ப் செட் என வேளாண் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு விடப்படும் இயந்திரங்கள் குறித்து ராமநாதபுரம் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மாணிக்கவேலு விளக்கினார்.

விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனை கூடம், சேமிப்பு கிடங்குகளில் விளைபொருட்களை கட்டணமின்றி சேமித்து வைத்தல் குறித்து ராமநாதபுரம் வேளாண் விற்பனை மற்றும் வணிகம் உதவி வேளாண் அலுவலர் நேசன் விளக்கினார். தங்கள் துறை மூலம் செயல்படுத்தபடவுள்ள திட்டங்களை திருப்புல்லாணி தோட்டகலை உதவி அலுவலர் மதன்குமார் எடுத்துரைத்தார். இதில் திருப்புல்லாணி வேளாண் அலுவலர் சபிதாபேகம், தோட்டக்கலை உதவி அலுவலர் ராஐவேல், துணை வேளாண் அலுவலர் சையது முஸ்தபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி நன்றி கூறினார். பயிற்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் மாரீஸ்வரன், உதவி வேளாண் அலுவலர் சந்திரலேகா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Thirupullani Velanur ,
× RELATED மாவட்ட தீ தடுப்பு, தொழிற்சாலைகள் : பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை