×

கடலாடியில் இலவச சட்ட உதவி மையம் துவக்கம்

சாயல்குடி. டிச. 11: கடலாடி நீதிமன்ற வளாகத்தில் முதுகுளத்தூர் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக இலவச சட்ட உதவி மைய அலுவலகம் துவக்க விழா நடந்தது. முதுகுளத்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர், சார்பு நீதிபதி நசீர் அலி தலைமை வகிக்க, கடலாடி மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் முத்துலெட்சுமி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் சங்க செயலாளர் பூமுருகன் வரவேற்றார்.

விழாவில் நீதிபதி நசீர் அலி பேசுகையில், ‘ஏழை, எளிய மக்கள் நீதிமன்றம் மூலம் பெற வேண்டிய உதவிகளை இலவச சட்ட உதவி மையத்தில் மனு அளித்தால் பெறலாம். மேலும் அரசு உதவி தொகைகள், திட்டங்கள், கிராமம் பொது நலன் சார்ந்த எந்தவொரு உதவிகளையும் கேட்டு மனு அளித்தால், சம்மந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்து தகுதி அடிப்படையில் வழங்க பரிந்துரை செய்யப்படும். கடலாடி வட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளில் சிறப்பு சட்ட முகாம் நடத்தப்படும், இதற்கு மக்கள் பிரதிநிதிகள் கிராமங்களில் போதிய விழிப்புணர்வு செய்ய வேண்டும். இதில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயனடையலாம்’ என்றார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மரகதமேரி, வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா, வழக்கறிஞர் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், பஞ்சாயத்து தலைவர்கள் ராஜமாணிக்கம்லிங்கம், காளிதாஸ் மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Free Legal Aid ,Kataladi ,
× RELATED கடலாடியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை