×

ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை அருகே பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

ஒட்டன்சத்திரம், டிச. : ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள முத்துநாயக்கன்பட்டி, புலியூர்நத்தம், ஜோகிபட்டி, புளியமரத்துக்கோட்டை  ஆகிய ஊராட்சிகளில், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனையின்பேரில்  மக்களை தேடி வருவாய்த்துறை என்னும் சிறப்பு முகாம், ஒன்றியச் செயலாளர் ஜோதீஸ்வரன்  தலைமையில்  நடைபெற்றது. இதில், பட்டா மாறுதல், பட்டா பெயர்  திருத்தம், உட்பிரிவு, குடும்ப அட்டை விண்ணப்பம், பெயர் நீக்கல், சேர்த்தல்  உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
    
இந்நிகழ்வில்  ஒன்றியச் செயலாளர் ஜோதீஸ்வரன், வட்டாட்சியர் முத்துச்சாமி,  ஊராட்சி தலைவர்கள் சுப்பிரமணி, தங்கராஜ், பூரணம் ராஜேந்திரன், துணைத்தலைவர்கள் கருணாநிதி, கோமதி சின்னச்சாமி, செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள்  செல்வி செல்லமுத்து, முத்து ஆறுமுகம், பொன்சிவாயாகவன், மண்டலதுணை  வட்டாட்சியர் வீரக்குமார், வருவாய் ஆய்வாளர் இந்திரா, ஊராட்சி செயலர்கள்  ஈஸ்வரன், சுப்பிரமணி, சிவா உள்ளிட்ட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.    

பட்டா வழங்கும் முகாம்: வத்தலக்குண்டு: நிலக்கோட்டை ஒன்றியம், நூத்தலாபுரம் ஊராட்சியில் உள்ள எஸ்.தும்மலப்பட்டியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடந்தது. நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி தலைமை  வகித்தார். துணைத்தாசில்தார் சரவணக்குமார், நிலக்கோட்டை ஒன்றியக்  கவுன்சிலர் கணேசன், நூத்தலாபுரம்  ஊராட்சி தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வராஜ் வரவேற்றார்.  நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சௌந்தரபாண்டியன் சிறப்பு  விருந்தினராக கலந்து கொண்டு பட்டா வழங்கினார். விழாவில் நிலக்கோட்டை வருவாய்  ஆய்வாளர் சென்னாகிருஷ்ணன், நூத்தலாபுரம் கிராம நிர்வாக அதிகாரி  ராமமூர்த்தி, திமுக ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளைச்சாமி, எஸ்.தும்மலப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் சக்திவேல், எஸ்.தும்மலப்பட்டி  பிரமுகர் சேதுபாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாமில் மனு கொடுத்த 65 பேரில் 50 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.

Tags : Ottansathram ,Patta ,
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி