3வது மாடியில் இருந்து விழுந்து கூலித்தொழிலாளி பரிதாப பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகமது பேட்டை புதுநகர் அவின்யூ பகுதியில் ஜனார்த்தனன் என்பவர் புதிதாக 3 அடுக்குமாடி வீடு கட்டுகிறார். இங்குசென்னை மாதவரத்தை சேர்ந்த சுமித் (47) என்பவர் புதிய வீட்டிற்கான இரும்பு கேட், மாடிப்படிகள் ஆகிய பணி செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் சுமித், 3வது மாடி அருகே எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வேலை செய்துதார். அப்போது அவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: