×

(தி.மலை) இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி செங்கம் அடுத்த குரும்பப்பட்டியில் படம் உண்டு

செங்கம், நவ.10: செங்கம் அடுத்த குரும்பப்பட்டியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நேற்று நடந்தது.செங்கம் அடுத்த குரும்பப்பட்டி கிராமத்தில் பழங்குடியினர் இருளர் சமுதாய மக்கள் அதிகம் வசித்து வரும் பகுதியாகும். இப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து கல்வி பயில வேண்டும் என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டது.இந்நிலையில் தமிழக அரசின் வீடு தேடி கல்வி திட்டம் சார்பாக இப்பகுதியில் கலைநிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று வீடு தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஆடல் பாடல் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் தலைவர் சடையன், பள்ளி தலைமை ஆசிரியர் சிவராமன், ஆசிரியர் பயிற்றுனர் ரமேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வி உட்பட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : T.Malai ,Home Search Education Awareness Art Show ,Kurumbapatti ,
× RELATED உயிரியல் பூங்கா ஊழியரை முட்டிக்கொன்ற 2...