×

அமைச்சர் சி.வெ.கணேசன் மனைவி காலமானார்

விருத்தாசலம், டிச. 10:  கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சருமான சி.வெ.கணேசனின் மனைவி பவானி(55). இவர்களுக்கு கவிதா, கனிமொழி, கலையரசி, சிந்துஜா என்ற நான்கு மகள்களும், வெங்கடேசன் என்ற ஒரு மகனும் உள்ளனர். அமைச்சர் சி.வெ.கணேசன் தனது குடும்பத்தினருடன் விருத்தாசலத்தில் உள்ள தில்லை நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை 8.45 மணியளவில் அமைச்சர் சி.வெ.கணேசனின் மனைவி பவானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள் அவரை, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து விருத்தாசலம் தில்லைநகரில் உள்ள அமைச்சர் சி.வெ.கணேசன் இல்லத்தில் பவானி அம்மாள் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, முத்துசாமி, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், மா சுப்ரமணியன், செஞ்சி மஸ்தான், சிவசங்கரன், ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி, சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழர் நீதிக் கட்சி தலைவர் சுபா இளவரசன், எம்எல்ஏக்கள் சபா ராஜேந்திரன், ஐயப்பன், வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், கண்ணன், காங்கிரஸ் ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சரின் தம்பியும் எழுத்தாளருமான இமையம், உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.அதிமுக எம்எல்ஏக்கள் அருண்மொழித்தேவன், பாண்டியன் ,விருத்தாசலம் முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன், நகர அதிமுக செயலாளர் சந்திரகுமார், தொகுதி செயலாளர் அருளழகன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு கழக செயலர் கிர்லோஷ்குமார்,  நிர்வாக இயக்குநர் இன்னசென்ட் திவ்யா, தொழிலாளர் ஈட்டுறுதி கழக இயக்குநர் ராஜமூர்த்தி, கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம், கடலூர் மாவட்ட எஸ்பி சக்திகணேஷ், விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமார், விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின், திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சிவா உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், பண்ருட்டி ஒன்றிய பெருந்தலைவர் சபா பாலமுருகன், மாவட்ட துணை செயலாளர் அரங்க பாலகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராமு, விருத்தாசலம் திமுக நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் பாவாடை கோவிந்தசாமி, வேல்முருகன்,  கனக கோவிந்தசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார், மருத்துவர் சங்கவிமுருகதாஸ், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அன்சார், உதயநிதி ஸ்டாலின் முத்துக்குமார், மாவட்ட கவுன்சிலர் சக்திவிநாயகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கணேஷ்குமார், ராஜேஷ்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் தங்க நாராயணசாமி, மணிவேல், நட்ராஜ், விருத்தாசலம் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பொன் கணேஷ், மங்கலம்பேட்டை பேரூர் நிர்வாகிகள் இப்ராஹிம், செல்வம், ராமானுஜம், கம்மாபுரம் ஒன்றிய பொறுப்பாளர்கள் சுரேஷ், முருகன், ஆசிரியர் பக்கிரிசாமி, வழக்கறிஞர்கள் ரவிச்சந்திரன், இளங்கோவன் , ரகுநாதன் உள்ளிட்ட திமுகவினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Tags : Minister ,CV Ganesan ,
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...