×

சாத்தூர் நகராட்சி தேர்தலுக்கான

சாத்தூர், டிச. 10: தமிழகத்தில் நகர்புற ஊராட்சி தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சாத்தூர் நகராட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் அரசு அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நகராட்சி ஆணையாளர் இளவரசர் தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட புகைப்படத்துடன் கூடிய புதிய வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். சாத்தூர் நகர் பகுதியில் உள்ள 24 வார்டுகளில்  உள்ள  வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை கட்சி நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் குருசாமி,  மதிமுக கணேசன், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் உட்பட பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags : Sattur Municipal Election ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...